``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் த...
உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 17 பதக்கங்களை வென்று விருதுநகர் மாணவர்கள் சாதனை; உற்சாக வரவேற்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது கடந்த நவம்பர் 22, 23ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து 1400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா சார்பில் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சி.எஸ்.ஏ கிளப் சார்பில் நோபல் அரினா மைதானத்தில் பயிற்சி பெறும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 4 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 4 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் 9 பேர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் இரயில் மூலம் விருதுநகர் சந்திப்பு நிலையத்திற்கு வந்தனர். இவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


















