``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் த...
``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
'செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார்' என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் அமுமுக டிடிவி தினகரன், "நாங்கள் எல்லாம் பள்ளி சென்றுகொண்டிருந்தபோது அரசியலில் இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன். 1977ஆம் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவர். அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் அரசியலில் பயணித்தவர். அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவிற்குப் பக்கபலமாக நின்றவர்.
இன்றைக்கு அவர் அரசியலில் எடுத்திருப்பது அவருடைய சொந்த முடிவு. அரசியலில் அதிக அனுபவம் பெற்ற அண்ணன் செங்கோட்டையன் எந்தவொரு முடிவையும் சரியாக யோசித்துதான் எடுப்பார்.
கடந்த இரண்டு நாள்களாக அவரிடம் பேசவில்லை. அவர் நிச்சயம் என்னிடம் பேசுவார். அப்படி பேசினால் இதுகுறித்து அவரிடம் நிச்சயம் பேசுவேன். நாங்கள் மதிக்கும் மூத்த தலைவர் அண்ணன் செங்கோட்டையன்.
அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார், ஏன் எடுத்தார் என்பதை அவரே நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் விளக்கிப் பேசுவார்.

எங்களின் அமுமுக கட்சி உடன் கூட்டணி வைக்க நிறையபேர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது யார் யார் என்று இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியாது. விரைவில் எங்களின் கூட்டணி யாருடன் என்று முடிவெடுப்போம்" என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.


















