``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
Vedan: ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராப் பாடகர் வேடன்; துபாயில் தீவிர சிகிச்சை!
மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்தார்.
மேடையில் ஏறுவதற்கு முன்பே அவர் அசௌகரியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் நிகழ்ச்சி நடத்தினார்.
அவருக்கு நெருக்கமானவர்களின் கூற்றுப்படி, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் உடனடியாக துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது ராப்பர் வேடனுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, நாளை கத்தாரில் நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகப் பக்கத்தில் வேடன் வெளியிட்ட அறிவிப்பில், “எதிர்பாராத உடல் நலப் பிரச்சினையால் எங்கள் கத்தார் நிகழ்ச்சி டிசம்பர் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உங்கள் புரிதல், பிரார்த்தனைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. எனது ரசிகர்களை ஏமாற்றியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் முழுமையாக குணமடைவதே தற்போது எனது முன்னுரிமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















