`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அ...
"இந்தியாவைப் பார்த்து எதிரணிகள் பயப்படும் காலம் இருந்தது, ஆனால் இப்போது"- தினேஷ் கார்த்திக் காட்டம்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

"இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள்.
ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருக்கிறார்கள்.
கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது.
இது இந்திய கிரிக்கெட்டிற்கு மோசமான காலம்.
உடனடி தீர்விற்கான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும்.
எனக்குத் தெரிந்தவரை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள் கூடுதலாக விளையாடி வருகிறார்கள்.
இந்த டெஸ்ட் தொடரில் 100 ரன்களுக்கு மேல் 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்கள்.
ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் 7 பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் விளாசியிருக்கின்றனர்.
இந்திய அணியால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். திடீரென எப்படி இப்படியான சரிவு ஏற்படும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

















