செய்திகள் :

TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?

post image

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம்(நவ.25) கோவையிலிருந்து சென்னை வந்தார். செங்கோட்டையனை துக்ளக் ரமேஷ், பெங்களூரு புகழேந்தி போன்றோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் செங்கோட்டையன். இதையடுத்து மாலை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசினார்.

இதைத்தொடர்ந்து இன்று (நவ 27) செங்கோட்டையன், தனது ஆதரவாளர் சிலருடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாக தகவல் வெளியானது.

எதிர்பார்த்தப்படியே இன்று காலையே விஜய்யின் தவெக பனையூர் அலுவலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பத்துவிட்டன. 9.10 மணியளவில் விஜய் தனது காரில் பனையூர் வந்துவிட்டார்.

காலை 9.30 மணியளவில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனா, முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்டோர் பனையூரில் ஆஜராகவிட்டனர்.

செங்கோட்டையனை ஆதவ் வரவேற்று அலுவலகத்துக்குள் கூட்டி வந்தார். முன்னதாக நேற்று விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு ஆதவ் காரில்தான் வந்திருந்தார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று செங்கோட்டையன் பனையூர் அலுவலகம் வரும்போது அங்கு, சிறு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமாகவும் தள்ளுமுள்ளுவாகவும் மாறியது.

செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசி தாக்க முற்பட்ட பாதுகாவலரை மன்னிப்பு கேட்க சொல்லி செய்தியாளர்கள் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.

``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவா... மேலும் பார்க்க

TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர

நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்... மேலும் பார்க்க

``செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைகிறாரா?'' - டிடிவி தினகரன் சொன்ன பதில்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேராக பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய... மேலும் பார்க்க

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இர... மேலும் பார்க்க

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்க... மேலும் பார்க்க

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்பு... மேலும் பார்க்க