செய்திகள் :

``அண்ணன் செங்கோட்டையன் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெக-வுக்கு உறுதுணையாக இருக்கும்'' - விஜய்

post image

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் எழுந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசிவந்த செங்கோட்டையன் தற்போது புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், நவம்பர் 26-ஆம் தேதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யைச் சந்தித்தார்.

K A Sengottaiyan
K A Sengottaiyan

இன்று (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். இதன்மூலம் தவெக 2026 தேர்தலில் உறுதியான மூன்றாவது அணியாக களமிறங்கும், என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ள விஜய் அதில், "20 வயசு இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவங்களுடைய மன்றத்தில் சேர்ந்தவர்.

சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.

இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவங்களுடைய அரசியல் அனுபவமும், களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்று அவங்களையும் அவங்களோடு இணைந்து பணியாற்ற நம்மளோடு கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்." எனப் பேசியுள்ளார்.

`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அப்டேட்ஸ்

டென்ஷனான கனிமொழி!மிஸ்ஸான எம்.எல்.ஏ...தென்மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டமும் பாதிப்படைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி பல்வேறு பகுத... மேலும் பார்க்க

``புதிய கூட்டணி அமைய வாய்ப்பு, 4 முனைப் போட்டி; பொறுத்திருங்கள்'' - டி.டி.வி தினகரன்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக க... மேலும் பார்க்க

TVK: பனையூரில் செங்கோட்டையன் & கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?

தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26-11-2025) ராஜினாமா செய்த செங்கோட்டையன், பனையூர் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்திருக்கிறார்.அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்ற... மேலும் பார்க்க

``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 'மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முக... மேலும் பார்க்க

'சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்' - பரபர இந்திரா பவன்! | Karnataka Congress

"2.5 ஆண்டுகள் சுழற்சி" ஒப்பந்தம்?கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி ... மேலும் பார்க்க