`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அ...
TVK: பனையூரில் செங்கோட்டையன் & கோ - த.வெ.க வில் இணைபவர்கள் யார் யார்?
தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26-11-2025) ராஜினாமா செய்த செங்கோட்டையன், பனையூர் அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அதிமுகவிலிருந்து பிரிந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் எனப் பேசி எடப்பாடியுடன் முரண் ஏற்பட்டு செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்யப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணையப் போகிறார் எனும் தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் நேற்று மாலையே பட்டினப்பாக்க வீட்டில் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தவெக அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர்.

முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கைட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் பாஜக-வில் இணைகிறார்.

விஜய்யும் 9.15 மணிக்கு பனையூர் அலுவலகம் வந்து சேர, இப்போது அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறார் செங்கோட்டையன். இன்னும் சில நிமிடங்களில் அவர் பத்திரிகையாளர்களையும் சந்திக்கவிருக்கிறார்.














