செய்திகள் :

2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?

post image

டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை அவர்களின் மண்ணில் வீழ்த்துவது, அதிலும் தொடரை வெல்வது இன்றும் கடினம்.

அதைவிட புளியங்கொம்பு என்னவென்றால், இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்வது.

ஆனால், கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு எதிரணிக்கு எளிதான செயலாக இது மாறியிருக்கிறது.

India vs South Africa
India vs South Africa

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை 3 - 0 என இந்தியாவில் ஒயிட் வாஷ் செய்து சென்றது.

தற்போது தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 - 0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

நியூஸிலாந்துடன் தோற்றபோது இந்தியா அணிக்கு ரோஹித் கேப்டனாக இருந்தார். இப்போது தென்னாப்பிரிக்காவுடன் தோற்றபோது சுப்மன் கில் காயத்தால் வெளியேறியதால் பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார்.

ஆனால், இதில் மாறாத ஒரே ஆள் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான். டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை அணியில் எடுக்காமல் ஆல்ரவுண்டர் வேண்டும் என வீரர்கள் தேர்வு விவகாரத்தில் இவரின் தலையீடு முதன்மையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் 9 டெஸ்ட்டில் 5-ல் தோல்வியடைந்திருக்கிறது.

இது இவருக்கு முன்பாக பயிற்சியாளர்களாக இருந்த அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோரின் பதவிக்காலத்தில் (7 ஆண்டுகள்) சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கையை விட ஒன்று அதிகம்.

சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமாக செயல்பாட்டை நுணுக்கமாக ஆராய வேண்டிய கம்பீரோ, ``சாம்பியன்ஸ் டிராபியை வென்றதும் ஆசிய கோப்பையை வென்றதும் இதே கம்பீர்தான்" என்று தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்துப் பொறுப்பேற்காமல் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்.

Gautam Gambhir - கவுதம் கம்பீர்
Gautam Gambhir - கவுதம் கம்பீர்

இந்த நிலையில்தான் சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி பேசியவை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

2011-ல் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதே ஆண்டில் இங்கிலாந்தில் 4 - 0 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது.

அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு இறுதி மற்றும் தொடக்கத்தில் (டிசம்பர், ஜனவரி) ஆஸ்திரேலியாவில் 4 - 0 (கடைசிப் போட்டியில் மட்டும் தோனி ஆடவில்லை) டெஸ்ட் தொடரை இழந்தது.

அந்தத் தொடரில் பெர்த் மைதானத்தில் 3-வது டெஸ்டில் தோற்று தொடரை இழந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்துகொண்டார்.

அப்போது, `உங்கள் தலைமையில் வெளிநாட்டில் தொடர்ச்சியாக 7-வது தோல்வியை இந்தியா பதிவு செய்திருக்கிறதே' என்று தோனியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த தோனி, ``தோல்விகளுக்கு என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன். நான்தான் அணியின் கேப்டன். நான்தான் முக்கிய குற்றவாளி. எனவே என்னை நானே பழி சொல்லிக் கொள்கிறேன்.

நான் பார்த்த வரையில், நிச்சயமாக நாங்கள் சிறப்பாக செயல்படாத மோசமான கட்டங்களில் இது ஒன்று.

Dhoni - தோனி
Dhoni - தோனி

இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும், இங்கு நடந்த 3 போட்டிகளிலும், நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. ஒரேயொரு முறைதான் 350 ரன்களை அடித்தோம்" என்று முழுக்க முழுக்க தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இத்தனைக்கும் அந்த அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், சேவாக், ஜாகிர் கான் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தனர். கம்பீரும் அந்த அணியில் இருந்தார்.

மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கும் தோனி, ``அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர்.

அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல.

ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள்" என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார்.

Dhoni - Gambhir | தோனி - கம்பீர்
Dhoni - Gambhir | தோனி - கம்பீர்

தோனியின் இந்த ஸ்பீச்சை ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது கம்பீரின் தற்பெருமை பேச்சோடு ஒப்பிட்டு, `அன்று இந்தியா மோசமாக தோற்றபோது கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றதும் இதே தோனிதான் என்று பெருமை பேசவில்லை. அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் யாரையும் குறை சொல்லவில்லை' என்று கூறி வருகின்றனர்.

சொந்த மண்ணில் இந்தியாவின் இத்தகைய மோசமான தோல்விக்கு யார் தான் பொறுப்பேற்பது, தோல்வியின்போதும் கம்பீரின் தற்பெருமை அணுகுமுறை எத்தகையது? யார் தான் பதில் சொல்வது?

Jemimah Rodrigues: "தோழி ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க" - WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) நடந்துவரும் 2025 மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார்.ஸ்மிருதி மந்தனாவின்... மேலும் பார்க்க

"இந்தியாவைப் பார்த்து எதிரணிகள் பயப்படும் காலம் இருந்தது, ஆனால் இப்போது"- தினேஷ் கார்த்திக் காட்டம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் ... மேலும் பார்க்க

இன்னும் 9 போட்டிகள்தான் இருக்கு; WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவதற்கான வழி என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு முதல் இரண்டு எடிஷனில் (2019-21, 2021-23) இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி.கடந்த எடிஷனில்(2023-25)இறுதிப் போட்டிக்குசெல்ல சுலபமான வாய்ப்பிருந்தும் சொந்த ம... மேலும் பார்க்க

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 - 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆ... மேலும் பார்க்க

Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது. 25 ஆண... மேலும் பார்க்க

IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம்" - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்... மேலும் பார்க்க