``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த ப...
``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த பெண் சொல்வது என்ன?
உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு காரணமாக இருந்த ஸ்மிருதி மந்தனாவிற்கும் அவரது காதலன் பலாஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மந்தனாவின் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடந்து வந்தது. ஆனால் திடீரென மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் திருமணம் தடை பட்டது.
திருமணம் தடை பட்ட அடுத்த நாளில் மந்தனாவின் காதலன் பலாஷ் குறித்து புதுப்புது தகவல்கள் பரவ ஆரம்பித்தது.
காதலன் பலாஷ் நடன இயக்குனர் ஒருவருடன் அந்தரங்க சாட்டிங்கில் ஈடுபட்டதாக கூறி அந்த சாட்டிங் விபரம் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது.

இதையடுத்து, மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றிவிட்டார். அதோடு மந்தனாவின் தந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் திருமணம் தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் காதலன் பலாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து மந்தனா வெளியில் வந்துவிட்டார்.
இந்நிலையில் பலாஷுடன் சாட்டிங்கில் ஈடுபட்ட பெண் பெயர் மேரி டி கோஸ்தா என்று தெரிய வந்துள்ளது. அப்பெண் இச்சர்ச்சை குறித்து முதல் முறையாக விளக்கமளித்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், மக்கள் என்னை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சாட்டிங் விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்த பெண்ணிற்கு தீங்கு இழைக்கவில்லை. நான் என்ன தவறு செய்தேன். மாறாக மோசடிக்காரரிடமிருந்து நான் அவரை(மந்தனா) காப்பாற்றி இருக்கிறேன். தயவு செய்து என்னை நம்புங்கள்''என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர வாய்ஸ் மெசேஜும் பகிர்ந்துள்ளார். அதில், "நான் அவரை சந்திக்கவில்லை. அவர் எனக்கு மெசேஜ் செய்தார். அதற்கு என்னை ஏன் குறிவைக்கிறீர்கள். ஒட்டு மொத்த நாடும் எதிர்பார்க்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர் எனக்கு மெசேஜ் செய்து என்னை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்.
நான் அவருக்கு முதலில் மெசேஜ் செய்யவில்லை. அவரது பதிவுக்கு நான் பதிலளித்தேன். எனக்கு இன்றைக்கு நடக்கக்கூடியது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனக்கு தெரியும் ஒட்டுமொத்த நாடும் ஸ்மிருதி மந்தனா மீது அன்பு செலுத்துகிறது. நானும் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். நான் யாரது உறவும் பிரிய காரணம் கிடையாது. யாருடைய காதலனையும் நான் தொடர்பு கொண்டது கிடையாது. எனவே என்னை குறிவைக்காதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.












.jpeg)








