"தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்" - ஆ...
மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?
மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப் பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் உடல் இருந்தது. அதனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்பெண்ணின் கையில் பி.வி.எஸ் என்று டாட்டூ வரையப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரியங்கா விஷ்வகர்மா (22) என்று அடையாளம் காணப்பட்டது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து டிராலியைக் கொண்டு வந்து போட்டது வினோத் ஸ்ரீனிவாஸ் (50) என்று தெரிய வந்தது.

அவரைப் பிடித்து சென்று விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரியங்காவைக் கொலை செய்து உடலை ஒரு நாள் வீட்டில் வைத்திருந்துவிட்டு அதன் பிறகு டிராலி பேக்கில் அடைத்து கழிமுகப்பகுதிக்குக் கொண்டு வந்து பாலத்திலிருந்து கழிமுகப்பகுதியில் தூக்கி எறிந்ததாக போலீஸாரிடம் வினோத் தெரிவித்துள்ளார். பாலத்திற்குக் கீழேதான் டிராலி பேக் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இரண்டு பேரும் 5 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தது வினோத்திடம் விசாரித்ததில் தெரிய வந்தது. சமீப காலமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

















