செய்திகள் :

BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்' கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?

post image

விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திரை பிரபலங்கள் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர்.

தற்போது வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், கெமி உள்ளிட்டோர் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்கள்.

மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களுக்குள் தினமும் ஏதாவதொரு பஞ்சாயத்தைக் கிளப்பி ஷோவில் எப்படியாவது தொடர வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் கெமி வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறி இருக்க வேண்டியது ரம்யாதான் என்றும் கடைசி நேரத்தில்தான் அது மாற்றப்பட்டு கெமி வெளியேறியதாகவும் ஒரு தகவல் தெரியவர நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.

'கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும் போதே திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் கெமி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதாம்.

bigg boss kemi
bigg boss kemi

படத்தின் தயாரிப்பு தரப்பு பிக் பாஸ் செல்வதற்கு முன்பே ஷூட்டிங் குறித்து கெமியிடம் பேசியதாகவும் ஆனால் ஷெட்யூலில் ஏதாவது மாற்றம் வரலாம், அதனால் 'பார்த்துக் கொள்ளலாம்' என்கிற மன நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சம்பந்தப்பட்ட படக்குழு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்ட நிலையில், கெமி நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்திருக்கிறார். எனவே படக்குழுவினர் சேனலில் பேசி அவரை எவிக்ட் செய்யுமாறு கேட்டதாகவும் தெரிய வருகிறது.

எனவே கடந்த வார எவிக்ஷன் புராசஸில் வெளியில் வந்திருக்கிறார். நிஜத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்த வாரம் ரம்யாதான் வெளியில் வந்திருக்க வேண்டியது' என்கிறார்கள் இவர்கள்.

BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்

இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்தால் இல்லை.பிக் பாஸ் வீட்டில் நடந்தது எ... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல" - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பி... மேலும் பார்க்க

BB Tamil 9: "எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்"- கம்ருதீன் குறித்து பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாள... மேலும் பார்க்க

BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெம... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?

பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்... மேலும் பார்க்க