சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ர...
Dhoni: இந்திய வீரர்களுக்கு தன் வீட்டில் விருந்தளித்த தோனி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விராட் கோலியை தோனி காரில் அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்க இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கின்றனர்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக ராஞ்சி சென்றிருக்கும் விராட் கோலி, ரிஷப் பந்த், ருத்துராஜ் கெயிக்வாட் ஆகியோர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருக்கின்றனர்.

இரவு விருந்துக்குப் பிறகு தோனி, கோலியை காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற காட்சிதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
Internet broke right here.#MSDhoni personally drove to drop #ViratKohli to his Team Hotel!#MahiRatpic.twitter.com/Hqgj4jJUCd
— MahiWay (@Mahipaglu07) November 27, 2025




















