14 மாதங்களுக்கு பின், நேற்று உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை; அடுத்தடுத்து என்ன ஆகும...
தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள்
கடந்த வாரம் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவிற்காக அவரது குடும்பத்தினர் மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். முதல் மனைவியின் குடும்பத்தினர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தாஜ் லேண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடிகர் அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் ஒன்றாக வந்து கலந்து கொண்டார். நடிகர்கள் சல்மான் கான், ஆர்யன் கான், சுனில் ஷெட்டி, ரேகா, சோஹா அலி கான், அமீஷா பட்டேல், ஜாக்கி ஷெராஃப், சித்தார்த் மல்ஹோத்ரா, வித்யா பாலன், சித்தார்த் ராய் கபூர், ஆதித்யா ராய் கபூர், நேஹா தூபியா, அங்கத் பேடி, பூஜா ஹெக்டே, நிம்ரத் கவுர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தர்மேந்திராவின் குடும்ப உறுப்பினர்களான சன்னி தியோல், பாபி தியோல், கரண் தியோல் மற்றும் அபய் தியோல் ஆகியோர் கலந்து கொண்டு வந்திருந்தவர்களை வரவேற்றனர்.

ஆனால் இதில் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமா மாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பிரார்த்தனை கூட்டம் முடிந்த பிறகு நடிகை மஹிமா சவுத்ரி, கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா மற்றும் மகன் யஷ்வர்தன் அஹுஜா ஆகியோர் ஹேமா மாலினியின் இல்லத்திற்கு சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இதேபோன்று, தாஜ் லேண்ட் ஹோட்டல் நிகழ்வுக்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஹேமா மாலினியின் இல்லத்திற்கு சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
முன்னதாக, ஹேமா மாலினி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதோடு, தனது கணவர் தான் தனக்கு அனைத்தும் என்று குறிப்பிட்டு நீண்ட பதிவையும் வெளியிட்டிருந்தார்.

தர்மேந்திரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வரை ஹேமா மாலினியுடன் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக தனது முதல் மனைவியின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் கடந்த 24ஆம் தேதி வீட்டில் காலமானார்.
அவருக்கு பிரபலங்கள் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தும் முன்பாகவே உடல் இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் பாலிவுட் பிரபலங்கள் இடுகாட்டிற்குச் சென்று தான் அஞ்சலி செலுத்தினர்.



















