`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 'இது தொடரும்' என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை
சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.
சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

டித்வா புயல்
தற்போது 'டித்வா' புயல் இலங்கை கடல் பகுதி மற்றும் வங்கக் கடலின் தென்மேற்கு திசையில் இருந்து வருகிறது.
இது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டை நோக்கி நகரும். இந்தப் புயல் வரும் 30-ம் தேதி, தமிழ்நாடு கடல் பகுதிகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புயல் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பக்கம் வரலாம் என்று கூறப்படுகிறது.
இதனால், நாளை (நவம்பர் 29, 2025), திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய தமிழ்நாட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம்.
தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.
நாளை மறுநாள் (நவம்பர் 30, 2025) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Special Bulletin No.7 dated 28.11.2025 pic.twitter.com/PrJC6oh9Ra
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 27, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 28, 2025



.jpeg)















