மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியி...
Rain Alert: வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் - எப்போது கரையைக் கடக்கும்?
தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கிறது.
இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு 700 கி.மீ தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வட மேற்கு திசையை நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் வழியாக புயல் நகரும் என்று கூறப்படுகிறது.
இந்தப் புயல் 30 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்திருக்கிறது.



.jpeg)















