BB Tamil 9: `பிரின்சிபல் பிரஜின்; தமிழ் ஆசிரியை கனி’ - தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்
எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?
கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் நாடுகளில் பரவி, தற்போது வடக்கு அரேபிய கடல் பகுதிக்கு வந்துள்ளது.
அதையும் தாண்டி, இந்த சாம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

டெல்லி பாதிப்பு
ஏற்கெனவே, டெல்லி கடும் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சாம்பல்களும் டெல்லியின் சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கலாம். இதில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், இந்த சாம்பல் மேகங்கள் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் இருக்கும் என்பதால் பாதிப்பிற்கான வாய்ப்பு சற்று குறைவே.
மத்திய அரசின் அறிவுறுத்தல்
இந்த சாம்பல்கள் இந்தியாவை பாதிக்கலாம் என்பதால் ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல்.எம் ஆகிய விமானங்கள் தங்களது சில விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விமான நிறுவனங்களை சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கவும், அந்த இடங்களுக்கான விமான பயணத்தை மாற்றவும், எரிப்பொருள் நிரப்புவதற்கான இடங்களை தேவைப்பட்டால் மாற்றவும் அறிவுறுத்தி உள்ளது.
ஒருவேளை விமானங்களில் ஏதேனும் சாம்பல் பாதிப்பு இருந்தாலோ, இருப்பதாகவோ நினைத்தாலோ உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.















