செய்திகள் :

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

post image

கொங்கு மண்டலம்

2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவாக உள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் அங்கு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் அதிகமுறை விசிட் செய்த மாவட்டம் கோவை” என்று கூறினார். ஆக திமுகவும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக களமாட தொடங்கியுள்ளது.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கோவை வருகைக்கு பிறகு, பாஜக-வினர் அங்கு கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். மோடி விசிட்டுக்கு பிறகு பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கோவை வந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோவை பாஜக

2021 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 2 எம்.எல்.ஏக்களை வெற்ற நிலையில், 2026 தேர்தலில் அந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தோம்.

கோவை
கோவை

அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

கிணத்துக்கடவு வழங்காவிடின் சிங்காநல்லூர் தொகுதி வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம். இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியிருப்பது கவுண்டர் சமுதாயத்தில் எங்கள் கூட்டணிக்காக பலத்தை அதிகரித்துள்ளது. அதனால் கூடுதல் தொகுதிகள் என்பதில் சமசரம் கிடையாது.” என்றனர்.

வேலுமணி

இந்த முடிவால் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சியாகியுள்ளார். பொதுவாக அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை தான் வழங்குவார். கடந்தமுறை கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 1 தொகுதியை மட்டுமே அவர் கூட்டணிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தவெக: "இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்!" - செங்கோட்டையன்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அம... மேலும் பார்க்க

'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை?

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தான் கர்நாடகா அரசின் தலைமைக்கான இப்போதைய போட்டிக்கு அடிப்படை காரணம். உறுதி 2023-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் வெற்றியின் போது... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியிலும் பஞ்சாயத்து?

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அக... மேலும் பார்க்க

Imran Khan:``இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா?" - பாகிஸ்தான் அரசு கூறும் பதில் என்ன?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ பரிசுப் பொருட்களை ஒப்படைக்காமை, நிலம் தொடர்பான ஊழல் வழக்குகளில் ந... மேலும் பார்க்க

காங்கிரஸ்: "ஆட்சியில் பங்கு; தலைமை தான் முடிவெடுக்கும்!" - காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி, திரு... மேலும் பார்க்க