செய்திகள் :

'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?

post image

சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார்.

Samson
Samson

சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோற்றிருந்தது. சென்னை தோற்ற அந்த 3 போட்டிகளிலும் சாம்சனும் மிக மோசமாகவே ஆடியிருந்தார். சாம்சனின் மீது சென்னை அணி நிர்வாகம் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது. டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் என்பதால் சென்னை அணியின் ரசிகர்களும் சாம்சனை கொண்டாட்டமாய் வரவேற்றிருந்தனர்.

ஆனால், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஆட்டத்தை சாம்சன் ஆடவில்லை.

சென்னையில் நடந்த பஞ்சாபுக்கு எதிரான போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் ப்ளெம்மிங் பேசுகையில், 'சாம்சனை ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அளவிட முடியாது. அவர் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வருவார். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடுவார்' என்றார். அந்த வார்த்தைகளை சாம்சன் இன்று நிஜமாக்கி காட்டியிருந்தார். ஸ்லோயர் ஒன்கள், ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கள் என டெல்லியின் பௌலர்கள் விதவிதமாக வீசிய அத்தனை பந்துகளையும் பக்குவமாக கையாண்டார். அக்சர் படேல் அத்தனை டைட்டாக வீசியும் அவரை கச்சிதமாக அடித்து வெளுத்தார்.

Samson
Samson

மேலும், இன்னிங்ஸை சாம்சன் தான் முன்னெடுத்து சென்றார். சாம்சனுடன் ஓப்பனிங் இறங்கிய ருத்துராஜூக்கும் பந்து அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை. பவர்ப்ளே முடிவில் அவர் 17 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

அதேமாதிரி, நம்பர் 3 இல் வந்த ஆயுஸ் மாத்ரேவும் ஆரம்பத்தில் Run a ball இல் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் வேகமெடுத்தாலும் கடைசியில் அவரை ரிட்டையர் அவுட் ஆக வெளியேற வைத்தனர். ஆக, சாம்சன் மட்டுமே ஆரம்பத்தில் பிடித்த வேகத்தை சதத்தை தாண்டிய பிறகும் தொடர்ந்தார். மொத்தமாக 56 பந்துகளில் 115 ரன்களை அடித்திருந்தார். கடைசி வரை நாட் அவுட் ஆக இருந்தார்.

சாம்சன் அடித்த அடியால் மட்டுமே சென்னை அணி 200 ரன்களை கடந்தது. மூன்று அடி வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். ஸ்டைலில் திருப்பி அடித்திருக்கிறார் சாம்சன்!

CSK vs DC : 'கால் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு கபிகபி! - சேப்பாக்கத்தில் எப்படி வென்றது சி.எஸ்.கே

நீண்ட காலம் கழித்து சி.எஸ்.கே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு கபிகபி நடந்திருக்கிறது. 'இதையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சுல்ல...' என்பது போல ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் சேப்பாக்கத்தில் குழும... மேலும் பார்க்க

'ஒரே ஒருத்தன்.!' - மாஸ் காட்டிய சூர்யவன்ஷி; ஆர்.சி.பி-யின் முதல் தோல்வி

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல் 10)நடைபெற்ற பெங்களூரு vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக இந்த இரண்டு அணிகளும் களம் இற... மேலும் பார்க்க

`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' - வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தே... மேலும் பார்க்க

'ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!' - திரில்லரை எப்படி வென்றது குஜராத்?

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு தோல்விகளுக்குப் பின் எப்படியாவது வெற்றிபெற வேண்... மேலும் பார்க்க

IPL : `தண்ணீர்ல மீனைப் போட்டா நீந்தும், கருவாடைப் போட்டா?' - வெறுப்பேற்றும் சிஎஸ்கே

வந்தாரை வாழ வைக்கலாம். அதற்காக பக்கத்து ஸ்டேட்டுக்கு பஸ்ஸூ பிடித்துப் போயெல்லாமா இன்னொரு டீமை வாழ வைப்பது? சிஎஸ்கே அந்த அளவுக்கு பரந்துபட்ட மனப்பான்மையோடு எதிர்த்து ஆடும் எல்லா அணிகளுக்கும் 2 புள்ளிகள... மேலும் பார்க்க

தத்தளித்த ஹைதராபாத்; தட்டித்தூக்கிய லக்னோ! - எப்படி வென்றது பண்ட் & கோ?

இந்த மேட்ச்சும் தோற்றால் ஓனரிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒரு பக்கம், சொந்த மண்ணில் எப்படியாவது இரண்டு புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம் என, லக்னோ மற்றும் ஹை... மேலும் பார்க்க