Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!
சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(நவ. 30) பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது.
சேலம் மாநகரப் பகுதிகளான ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, ஐந்து சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது.
சேலம் கருப்பூர் அருகே சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தெரியாத அளவிற்கு பெய்த கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆம்னி வேன் மோதி நடைப்பயிற்சி சென்ற 3 பேர் பலி!
நேற்று புறநகர் பகுதிகளான ஓமலூா், எடப்பாடி, ஆத்தூா், மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில், பின்னா் இடைவிடாமல் தொடர் மழை பெய்தது.
புயல் காரணமாக சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் விடுத்ததை தொடர்ந்து சாலை தெரியாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.