செய்திகள் :

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

post image

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷினி (22) இறுதியாண்டு படித்துவந்தார்.

இவர், கல்லூரி அருகே உள்ள நல்லாம்பட்டிநாயக்கன்பட்டியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி வீட்டில் சக மாணவிகளுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வர்ஷினி தங்கியிருந்த அறையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்பாலை போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அவரது அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், வர்ஷினியின் தந்தை வரதராஜன், அவரைப் பார்க்க வந்து சென்றதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வர்ஷினி

இதுகுறித்து வர்ஷினியின் தாய் உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் வந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

உஷாவுக்கும் வேறொருவருக்கும் நடைபெற்ற திருமணத்தில் வர்ஷினி பிறந்துள்ளார். அவர் பிறந்த சில ஆண்டுகளில் உஷாவின் கணவர் அவரை விட்டு பிறிந்த நிலையில், வரதராஜுவை உஷா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நெசவுத் தொழிலாளியான வரதராஜன், உஷாவை திருமணம் செய்துகொண்டபின் வர்ஷினியை தனது குழந்தையாகவே வளர்த்து வந்துள்ளார்.

வர்ஷினி மீதான பாசம் காரணமாக உஷாவும் வரதாஜனும் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வர்ஷினி, ஆண் ஒருவருடன் பழகி வந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. அண்மையில் ஆண் ஒருவருடன் வர்ஷினி ஒன்றாக இருக்கும் புகைப்படம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

அது வரதராஜனுக்கு தெரியவரவே, அந்த நபர் யார்? என விசாரித்தபோது, அவர் திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்குத் திருமணாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜன் வர்ஷினியிடம் அந்த ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார்.

கொலை

படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அதனை வர்ஷினி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அந்த ஆண் நண்பரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு திருநெல்வேலிக்கு சென்ற வர்ஷினி வீட்டுக்குச் செல்லாமல் மீண்டும் அந்த ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார்.

இதையறிந்த வரதராஜன் சேலத்துக்கு வந்துள்ளார். மகள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அவர், திருமணமானவரை திருமணம் செய்தால் வாழ்க்கை வீணாகிப்போய்விடும் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், வர்ஷினி விடாப்பிடியாக அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

இதனால், கோபம் அடைந்த வரதராஜன் மகளை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு சென்னைக்குச் தப்பிச் சென்றிருக்கு வாய்ப்புள்ளது' என்று உஷாவிடம் விசாரித்த போலீஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி உஷாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சேலம் சென்றுவிட்டு சென்னைக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் சின்னதங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார் வரதராஜனைப் பிடிக்க சென்னை விரைந்துள்ளனர். வரதராஜனைப் பிடித்த பின்னரே இக்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க