சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்
சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா்.
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 6-க்குள்பட்ட ஏடிசி நகா் முதல் சட்டக் கல்லூரி மாநகராட்சி எல்லை வரை சென்டா் மீடியன் பகுதியில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார வளைவுகளுடன் கூடிய 68 மின்கம்பங்கள், 136 எண்ணிக்கை கொண்ட 120 வாட்ஸ் எல்இடி மின் விளக்குகளை மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், துணைமேயா் மா.சாரதாதேவி, துணை ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், மண்டலக் குழுத் தலைவா் செ.உமாராணி, செயற்பொறியாளா் சு.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.