செய்திகள் :

சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி

post image

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண நெருக்கடியில் ஆதரவின்றி தவிக்கும் பெண்களை குறித்து பழகும் இவன், அந்த பெண்களுக்கு கடன் உதவிகளை செய்து கொடுப்பதைப் போல ஏமாற்றி தவறான எண்ணத்தில் நெருங்கி பழகி வந்திருக்கிறான். அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதுடன் அதை வைத்தே பாலியல் இச்சைகளை நிறைவேற்றி வந்திருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளனர். மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில் மணிகண்டன்

இந்த கொடூர பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் பெண் ஒருவருக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அதை வீடியோ எடுத்துள்ளார்.

சில நாள்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டன் செல்போனை எடுத்துப் பார்த்திருக்கிறார். பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார். சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாக தெரிகிறது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது " என்றனர்.

ஈரோடு: "கிட்னியை விற்று கடனைக் கட்டு" - எஸ்.பி அலுவலகத்தில் கதறிய பெண்; பாஜக நிர்வாகி கைது

ஈரோடு மாவட்டம் கொங்கு ஸ்கூல் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான சுகுணா. அசோகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரிடம் 2024-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக வட்டிக்கு பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க