செய்திகள் :

சேலம்: ISO தரச்சான்று பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி! - சாதித்தது எப்படி?

post image

தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவு எனச்சொல்லி மூடப்பட்டு வருகின்றன. பொதுப் பள்ளியாக இருந்தாலும் பல அரசு பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி என்கிற மனநிலையில் அரசு தொடக்கப்பள்ளிகளை பெற்றோர் புறக்கணித்து வருகின்றனர்.

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற பள்ளி

அதையும் மீறி அர்ப்பணிப்பு மிகுந்த சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டம் கொண்டப்பப்நாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தமிழ்நாட்டில் ISO தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி என்கிற சாதனையைப் படைத்திருக்கிறது.

இது குறித்து பேசும் பள்ளி ஆசிரியர்கள், " தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இந்த அரசுப்பள்ளியை தரம் உயரத்த வேண்டும் என்பதை லட்சியமாக ஏற்றுக் கொண்டோம். மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி வளாகத்தில் சி‌.சி.டி‌.வி கேமிராக்கள், பொது அறிவு மேம்பட டிஜிட்டல் நூலகம், உயர்தர வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, தரமான இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை, என ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தோம்.

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற பள்ளி

பள்ளியை வந்து பார்த்த முன்னாள் மாணவர்கள் ஐ.எஸ்.ஓ தரச்சான்றுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கினார்கள். தரச்சான்று வழங்கும் அதிகாரிகள் மூன்று முறை இங்கு வந்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த தரச்சான்றை வழங்கினார்கள். பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கூட்டு முயற்சி தான் அனைத்திற்கும் முக்கிய காரணம்" என்றனர் .

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா.இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்ச... மேலும் பார்க்க

திறன் மேம்பாடு டு சர்வதேச பணி: ஜெர்மனி கல்வி நிறுவனத்துடன் சென்னைஸ் அமிர்தா கைக்கோர்ப்பு!

இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, லாஜிஸ்டிக்ஸ் செக்டர் ஸ்கில் கவுன்சில் (Logistics Sector Skill Council - LSC), ஜெர்மனியின் பெர்லினில் அமைந்துள்ள BBW Hoch... மேலும் பார்க்க

2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்!

வெராண்டா லெர்னிங் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் (BFSI) துறைக்கான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவான வெராண்டா பையர், 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்காக சிறப்ப... மேலும் பார்க்க

"பள்ளி முதல் கல்லூரி வரை" - மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களின் அறக்கட்டளை

அமெரிக்க வாழ் தமிழர்களால் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு அறக்கட்டளை’, தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உன்னத நோக்குடன் செயல்பட்டு... மேலும் பார்க்க

ஒடிசா: 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்; வலுக்கும் கண்டங்கள்!

ஒடிசா மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-இல் வெளியான 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படத்தின் பிரபலமான 'நிம்புடா நிம்புடா' பாடல் இடம்பெற... மேலும் பார்க்க

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி; கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார்

சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.தமிழ்நாட... மேலும் பார்க்க