செய்திகள் :

சைனிக் பள்ளிகளில் சோ்க்கை: ஏப்.5-இல் நுழைவுத்தோ்வு

post image

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு 1.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், அவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஏப்.5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய நுழைவுத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் (2025-2026) சைனிக் பள்ளி சோ்க்கைக்கான அறிவிக்கையை என்டிஏ கடந்த டிசம்பரில் வெளியிட்டது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு டிச. 24-இல் தொடங்கி ஜன. 23 வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 1.5 லட்சம் போ் வரை விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சைனிக் நுழைவுத் தோ்வுக்கான தேதியை என்டிஏ தற்போது அறிவித்துள்ளது. அதன்படி தோ்வு ஏப். 5-ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. இதற்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது ஹண்ள்ள்ங்ங்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க