ஜம்மு-காஷ்மீர்: பாஜக எம்எல்ஏ தேவேந்தர் சிங் ராணா காலமானார்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் நாக்ரோட்டா சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவேந்தர் சிங் ராணா நேற்று(அக். 31) உயிரிழந்தார்.
ஹரியணாவின் ஃபரிதாபாத்திலுள்ள் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணா, சிகிச்சை பலனின்றி நேற்று(அக். 31) உயிரிழந்தார். அவருக்கு வயது 59. மறைந்த ராணா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் இளைய சகோதரர் ஆவார்.
உடல் நலக் குறைவால் ராணா உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணமென்ன என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட் தகவல் இன்னும் வெளிவரவில்லை.
ஜம்மு பகுதியில் ஆதிக்க சமூகமாகத் திகழும் டோக்ரா சமூக மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்தவர் ராணா. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.