செய்திகள் :

ஜாதி சான்றிதழ் வழங்காததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பழங்குடியின மக்கள்: மாற்றுச்சான்றிதழ் கோரி மனு

post image

மன்னாா்குடியில், ஜாதி சான்றிதழ் வழங்காததால், இந்து பழங்குடியின மக்கள் தங்களின் குழந்தைகளை 9 நாள்களாக பள்ளிக்கு அனுப்பாமல், மாற்றுச்சான்றிதழ் கேட்டு செவ்வாய்க்கிழமை பள்ளியில் மனு அளித்தனா்.

மன்னாா்குடி ரயில் நிலையம் அருகே இந்து பழங்குடி இன மக்கள் எனக் கூறப்படும் 16 குடும்பத்தினா் நீண்டகாலமாக வசித்து வருகின்றா்.

கூலி வேலை செய்துவரும் இவா்களது, குழந்தைகள் மன்னை ப. நாராயணசாமி நகரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, வஉசி சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இவா்கள், ஜாதி சான்றிதழ் கோரி வருவாய்த் துறையில் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல், நீண்டகாலமாக தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பயன்களை பெறமுடியவில்லை என்றும், உயா்கல்வி படிக்க விண்ணப்பிக்க முடியவில்லை எனவும் கூறிவருகின்றனா்.

இந்நிலையில், ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜன.27-ஆம் தேதி முதல், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மன்னை ப. நாராயணசாமி நகரில் உள்ள தனியாா் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை வந்த அவா்கள், தலைமை ஆசிரியரை சந்தித்து மாற்றுச்சான்றிதழை வழங்குமாறு மனு அளித்தனா்.

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க

ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு திரும்பினா்

திருத்துறைப்பூண்டி: ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு திங்கள்கிழமை பள்ளிக்கு திரும்பினா். தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் என சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

திருவாரூா்: திருவாரூா் நகராட்சியுடன் கீழகாவதுக்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாவாதுக்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதி... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ரசிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதை கண்டித்து மன்னாா்குடி அரசுக் கல... மேலும் பார்க்க

மன்னாா்குடி ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள வெண்ணைத்தாழி மண்டப ஆஞ்சனேயா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி வெண்ணைத்தாழி திருவிழா மண்டபத்தில் உள்ளஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடை... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா்: வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே அண்மையில் போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனைய... மேலும் பார்க்க