”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்”...
சிறை சென்ற கணவன்; திருமணம் மீறிய உறவில் மனைவி - ஜாமீனில் வந்த கணவன் கொடூர கொலை
ஆந்திரா மாநிலத்திலுள்ள பெதராவீடு பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவர், தனது திருமணம் மீறிய உறவை எதிர்த்ததால் கணவர் ஸ்ரீனுவை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது.
அந்தப் பெண் தனது சகோதரனின் உதவியுடன், ஆட்கள் வைத்து கணவரை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீனு லாரி டிரைவராக இருந்திருக்கிறார். இவர் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சியை திருமணம் செய்திருக்கிறார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்ரீனு போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீனு சிறையில் இருந்தபோது ஜான்சி, தனது சகோதரனின் நண்பரான சூர்ய நாராயணாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார்.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீனு இந்த உறவை எதிர்த்து, அவர்களை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ஜான்சி தனது கணவரை கொல்ல திட்டமிட்டு, குண்டூரைச் சேர்ந்த நான்கு பேரை ரூ.2 லட்சத்திற்கு வரவைத்திருக்கிறார்.

முதலில் இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அது தோல்வியில் முடிந்திருக்கிறது.
இறுதியாக பெதராவீடு பகுதியிலுள்ள ஒரு கோவில் அருகே ஸ்ரீனு கண்களில் மிளகாய்ப்பொடி தூவி, கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தனர்.
இதையடுத்து, ஜான்சியையும் அவரின் சகோதரனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

















