”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்”...
`காட்டிகொடுத்த 7 வயது மகன்' - 50 வரை சரியாக எழுத தெரியாத 4 வயது மகளை அடித்து கொன்ற தந்தை!
குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் கனவாக இருக்கும். அதற்காக சில பெற்றோர் தங்களது குழந்தைகளை தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்த்து விட்டு படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.
ஹரியானா மாநிலத்தில் ஒரு தந்தை தனது மகள் சரியாக படிக்காததால் அவளை அடித்து கொலை செய்துள்ளார். பரிதாபாத்தில் உள்ள ஜட்செந்திலி என்ற என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெய்ஸ்வால்(31). இவருக்கு 4.5 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இதில் 4.5 வயது மகள் வன்ஷிகா படியில் இறங்கியபோது கீழே விழுந்துவிட்டதாக கூறி கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். அக்குழந்தைக்கு உடம்பு முழுக்க காயம் இருந்தது. குழந்தையின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். அவருக்கு கிருஷ்ணா போன் செய்து தகவல் கொடுத்தார்.
குழந்தையின் தாய் நேரடியாக அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் தலையில் காயம் இருந்தது. குழந்தை சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனது. குழந்தையின் தாய் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் 7 வயது மகன் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.

வன்ஷிகாவை தந்தை கிருஷ்ணா அடித்து உதைத்ததாக 7 வயது மகன் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணாவின் மனைவி ரஞ்சிதா இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் கிருஷ்ணாவை பிடித்துச்சென்று போலீஸார் விசாரித்தபோது, சிறுமியிடம் 1-50 வரை நம்பர்களை எழுதும்படி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி சரியாக எழுதவில்லை. இதனால் கோபத்தில் சிறுமியை கம்பால் அடித்துள்ளார். அதோடு சிறுமியை தூக்கி தரையில் தூக்கியடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்து சிறுமி உயிரிழந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பகலில் மனைவியும், இரவில் கிருஷ்ணாவும் வேலைக்கு சென்றனர். பகலில் கிருஷ்ணா குழந்தைகளை கவனித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

















