செய்திகள் :

”ஒரே மேடையில் பல கட்சிகள்; ஒன்றிணைத்த பெருமை சிபிஐ, வருமான வரித்துறையையே சாரும்” - மாணிக்கம் தாகூர்

post image

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் வந்துவிட்டாலே தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துவிடுவார்.  தமிழகத்திற்கு அவர் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றுவரை கட்டி  முடிக்கப்படவில்லை.  மதுரைக்கும், கோவைக்கும் வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் வரவிடவில்லை. ஓசூர் விமான நிலையமும், மதுரைக்கான விமான நிலைய விரிவாக்கமும் வரவில்லை.

மாணிக்கம் தாகூர்

கேரளாவுக்கு செல்லும் ரயிலை தமிழகத்தில் இயக்குவதாக இன்று கணக்கு காட்டுகிறார்.  தமிழர்களை துன்புறுத்துவது மட்டும்தான் அவரது வேலை. சி.பி.ஐ, வருமான வரித்துறை கடுமையாக வேலைபார்த்து 13 நாட்களில் பல கட்சிகளை இன்று மேடைக்கு கூட்டிவந்துவிட்டனர். சி.பி.ஐ,  வருமான வரித்துறையின் முழுநேரப் பணியே  என்.டி.ஏ கூட்டணியை உருவாக்கும் பணிதான். ஒரே மேடையில் பல கட்சி தலைவர்களை அமர வைத்த பெருமை இந்த இரண்டு துறையையேச் சேரும்.

நூறுநாள் வேலை உறுதிச்சட்டம் நிறுத்தப்பட்டதால் 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்துவிட்டார்.  பெரும் பணக்காரர்களுக்கான அரசியல் என்பதை மோடி மீண்டும் நிருபித்துள்ளார். கல்விக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து தி.மு.கவும், காங்கிரஸும் குரல் கொடுத்து வருகிறது. வரலாற்றை மாற்றுவதும், புத்தகத்தில் முகலாய மன்னர்களை வில்லனாக காட்டுவதுதான் பா.ஜ.கவின் வேலை.

மாணிக்கம் தாகூர்

சிவகங்கைச் சீமையை மீட்க வீரமங்கை ராணி வேலுநாச்சியாருக்கு, ஹைதர்அலி உதவி செய்த வரலாற்றைக் காட்ட மாட்டார்கள்.  இஸ்லாமியர்களும் இந்துக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை.  எடப்பாடி பழனிசாமி ஆட்சி வந்தால் இந்த கொள்கை மாறிவிடும்,  ஆனால். வருவதற்கு வாய்ப்பு இல்லை. தலைவர்களை மிரட்டி உட்கார வைக்க முடியும். ஆனால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எதிர்க் கட்சி என்பது என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைக்காது” என்றார்.

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது" - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

தூத்துக்குடியில் தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத... மேலும் பார்க்க

தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை - பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், ... மேலும் பார்க்க

தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் சூசகம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஐயகாந்த் இன்று (ஜன.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அ... மேலும் பார்க்க

கருணாநிதியின் முதல் தேர்தல் டு தொட்டிச்சியம்மை கதை! - இந்தவாரம் ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா?

முதல் களம் - 02காங்கிரஸை கதிகலங்க வைத்த கருணாநிதியின் உத்திமுதல் களம் - 2 | கருணாநிதிதான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதி... மேலும் பார்க்க

OPS: அடுத்தடுத்து அணி மாறும் ஆதரவாளர்கள்; சட்டமன்றத்தில் சேகர் பாபு உடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ்?

சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்ட... மேலும் பார்க்க

'அதட்டல் வேலுமணி; தங்கமணிக்கு தனி கவனிப்பு; சங்கடத்தில் அதிமுகவினர்?' - NDA கூட்டம் ஹைலைட்ஸ்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் NDA வின் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அணிவகுத்த இந்... மேலும் பார்க்க