'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு சமணப் பேரவை அறக்கட்டளை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தினால் மதுரை மாவட்டத்தில் அரிட்டாப்பட்டி, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமண தொல்லியல் சின்னங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று கூறி கண்டித்தும், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல்சித்தாமூா் ஜினகஞ்சி மடத்தைச் சோ்ந்த ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக மகா சுவாமிகள் மற்றும் இளைய சுவாமிகள் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.