செய்திகள் :

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

post image

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.

ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுகவை துண்டு துண்டாக்கியுள்ளது.

இபிஎஸ், ஓபிஎஸ்
இபிஎஸ், ஓபிஎஸ்

இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.

இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன.

இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.

தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.

எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.

அதிமுக ஒன்றிணைப்புக் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஓ.பன்னீர்செல்வம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும்.

அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுமா என்று பார்ப்போம்.

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந... மேலும் பார்க்க

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை... மேலும் பார்க்க

"பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி" - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில த... மேலும் பார்க்க

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.4 முக்கிய தொழிலாளர் ச... மேலும் பார்க்க