செய்திகள் :

டிஜிட்டல் மோசடியில் கிடைத்த ரூ.10 கோடி; 5435 வங்கி கணக்குகளுக்கு மாற்றிய சோசியல் மீடியா பிரபலம் கைது

post image

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட ஒரு கும்பல் புனேயைச் சேர்ந்த முதியவரை டிஜிட்டலில் கைது செய்து ரூ.10 கோடியைப் பறித்தது.

முதியவர் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.10.74 கோடியைத் தாங்கள் சொல்லும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும்படி கூறியது.

விசாரணைக்கு பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் சொன்னபடி முதியவரும் ரூ. 10.47 கோடியை டிரான்ஸ்பர் செய்தார். ஆனால் அக்கும்பல் சொன்னபடி பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் இம்மோசடியில் தொடர்புடைய நபர் ஒருவர் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது தெரிய வந்தது.

டிஜிட்டல் கைது
டிஜிட்டல் கைது

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹர்ஷத் சுபாஷ் தான்டோல், சமர்த் சுரேஷ் தேஷ்முக், அமர் சிவாஜி அட்டர்கி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், தான்டோல், ஏ.டி.எம். மூலம் எடுத்த பணத்தை ரோஹன் ஜாதவ் என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது. இம்மோசடியில், ரோஹன் ஜாதவ் மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ரோஹன் ஜாதவின் வங்கிக்கணக்குகள் அனைத்தையும் போலீஸார் முடக்கினர். சோசியல் மீடியா பிரபலமான ரோஹன் ஜாதவ் அனைத்து வங்கிக்கணக்கையும் முடக்கியதால் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த ஜாதவ், மோசடி செய்யப்பட்ட ரூ.10.74 கோடியை மொத்தம் 5,436 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. அதோடு டெலிகிராம் செயலி மூலம் ஹாங்காங்கில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்த அவர், அவர்களுடன் அடிக்கடி வீடியோ கால்களில் பேசியது விசாரணையில் தெரியவந்தது.

ஜாதவ் தனது ஹாங்காங் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு டிஜிட்டல் கிரிப்டோகரன்சி மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நாணயத்திற்கு பணத்தை மாற்றுவதற்குக் கணிசமான கமிஷன் பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜாதவ் மீது புனே மற்றும் பிம்ப்ரி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இருந்து கைபேசி,... மேலும் பார்க்க

சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு பணிமுடித்துவிட்டு இ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டிய மனைவி; தலைமுடியைப் பிடித்து இழுத்து அறுத்துக் கொன்ற கணவன் - அம்பத்தூரில் அதிர்ச்சி!

சென்னை அம்பத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னா. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி வைதேகி (34). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வைதேகியும் சின்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்... மேலும் பார்க்க

மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி - போலீஸ் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி சென்று திரும்பி வந்த 8 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுமிக்கு பாலியல் கொடும... மேலும் பார்க்க

உடல்நிலை சரியில்லாத மகள் தற்கொலை; துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை - பெரம்பலூர் சோகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். இந்நிலையில், சோபனா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பெண் அடித்து கொலை – கோவையில் மீண்டும் அதிர்ச்சி

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாந்தி வீட்டு வேலை செய்து ... மேலும் பார்க்க