செய்திகள் :

'டிரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அந்த ஒரு முடிவு.!' - வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய  (ஏப்ரல் 3) முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, பஞ்சாப் ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.

PBKS
PBKS

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "உண்மையைச் சொல்லப்போனால், 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கும் போது ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் பிரியான்ஷ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் கொடுத்த அதிரடியான தொடக்கம் அந்தப் பதற்றத்தைப் போக்கி எங்களுக்கு ஒரு அபாரமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, ஒட்டுமொத்த அணியின் பேட்டிங் வரிசையையும் நிலைப்படுத்துகிறது. முதல் இரண்டு போட்டிகளிலேயே எங்கள் அணியின் அனைத்து வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது கடினமான சூழல்களை எப்படி கையாள்வது என்ற நம்பிக்கையை வீரர்களுக்கு அளிக்கும்.

Shreyas
Shreyas

எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துள்ளோம் - அதாவது வெளியே இருப்பவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அல்லாமல், எங்களுக்குள் ஒருவரை ஒருவர் வியக்க வைக்கும் வகையிலான ஒரு தனித்துவமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதுதான் அது. இது எங்களுக்கு ஆட்டத்தில் ஒரு தெளிவைத் தருகிறது.

எதிரணியில் ஸ்பின் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொள்ளும் உள்நாட்டு வீரர்கள் இருந்ததால், சஹாலுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தாலும் நான் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடிவு செய்தேன்.  யுஸ்வேந்திர சஹால் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் சஹால் மீது நம்பிக்கை வைப்பேன். அதே சமயம் 'ஓவர் ரேட்' விஷயத்தில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடைசி 2 ஓவர்களில் 5 பீல்டர்கள் உள்ளே இருக்கும்போது பந்துவீசுவது சவாலானது, அந்தத் தவற்றை அடுத்த முறை சரிசெய்து கொள்வோம்," என்று பேசியிருக்கிறார்.

CSK: 'சோதனை மேல் சோதனை'; காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் தோல்வியைச் சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சீசன் முழுக்கவே நல்ல பெர்பாமென்ஸைச் சிஎஸ்கே-வின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே வெளிப்படுத்தியி... மேலும் பார்க்க

ஆப்கன் வீரருக்கு இந்தியக் குடியுரிமை? - BCCI சொன்ன விஷயம்; ரஷீத் கான் அதிர்ச்சித் தகவல்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத்... மேலும் பார்க்க

PBKS vs LSG: "வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்!"-கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத... மேலும் பார்க்க

PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வாங்கிய லக்னோ!

ஐ.பி.எல்-இல் இப்போதைய நிலையில் அசைக்கவே முடியாத அணியாக, புள்ளி பட்டியலில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், எப்படியாவது மேலே வந்து விட மாட்டோமா? என்ற எண்ணத்தில் 8வது இடத்தில் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ்: "கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் விலக வேண்டும்" - காரணம் சொல்லும் மனோஜ் திவாரி

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஹர்திக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட... மேலும் பார்க்க

MI vs PBKS: 'என்னங்க சிவாஜி இப்படி ஆயிடுச்சு...' - பரிதாப மும்பை இந்தியன்ஸ்!

ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்து, ஒன்பதாவது இடத்திலேயே நீடிக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.De kockநேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேய... மேலும் பார்க்க