செய்திகள் :

'டெல்லியால முடியும்னா எங்களாலயும் முடியும்!' - ரெக்கார்ட் சேஸின் ரகசியம் பகிரும் ஸ்ரேயாஸ்

post image

பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 264 என்ற இமாலய இலக்கை அடிக்க, அதை 19வது ஓவரிலேயே எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது ஷ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி.

Shreyas
Shreyas

இந்த அபார வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், 'உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. மைதானத்தில் வெயில் அனல் பறந்தது.அந்தச் சூழலில் பவுலர்களை எதிர்கொண்டு சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசுவது சாதாரணமான விஷயம் அல்ல. ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்ந்து போவோம், என்ன செய்வதென்றே தெரியாது. ஆனால் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பவர்பிளே முடிந்து சஹால் பந்துவீச வந்தபோது பந்து சற்று நின்று வந்ததே தவிர, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ராகுல் ஆடிய விதம் அற்புதம், கண்ணுக்கு விருந்தாக இருந்தது. எதிரணி எவ்வளவு ரன்கள் குவித்தாலும், அவர்களை விட ஒரு ரன் அதிகமாக எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ராகுல் ஒவ்வொரு பந்தையும் மிக அழகாகக் கையாண்டார், அவர் கஷ்டப்பட்டு ஆடுவது போலவே தெரியவில்லை. அப்போதுதான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், 'அவர்களால் இவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமென்றால், நம்மாலும் நிச்சயம் முடியும்' என்று.

Shreyas
Shreyas

கடந்த போட்டிகளில் கூட 220-225 ரன்களை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே சேஸ் செய்திருக்கிறோம். அதனால் அதே நம்பிக்கையுடன் களமிறங்கினோம். பவர் பிளேயிலேயே அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டி எங்களுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மீதமிருந்த நாங்கள் அந்தத் தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டோம். கடந்த மூன்று நாட்களாக வெயிலில் கடுமையாகப் பயிற்சி செய்திருக்கிறோம். இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, நாளை மீண்டும் அடுத்தக்கட்டத்தைப் பற்றி திட்டமிடுவோம்" என உற்சாகமாகப் பேசியிருந்தார்.

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' - குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

"என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?" - இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே "கெத்தா" டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய்... மேலும் பார்க்க

'எல்லாத்துக்கும் காரணம் பீல்டிங்தான்!' - தோல்வி குறித்து அக்சர் படேல்!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 25) ஆட்டத்தில், சிக்ஸர் மழை பொழிந்த டெல்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை டெல்லி அணி நிர்ணயித்த போதிலும், பஞ்சாப் வீரர்... மேலும் பார்க்க

'மைதானத்துக்குள் வந்த ஆம்புலன்ஸ்; ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட லுங்கி இங்கிடி!' - என்ன நடந்தது?

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயல்கையில் லுங்கி இங்கிடி தவறி விழுந்து பலத்த அடிபட மைதானத்துக்குள்ளே... மேலும் பார்க்க

'அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்!'; மெலிந்த தோற்றத்தில் பென் ஸ்டோக்ஸ் - எதனால் இந்த மாற்றம்?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.Ben Stokesஇங்கிலாந்து அணிய... மேலும் பார்க்க

'வந்துருச்சு...வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' - லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். 'நீங்க ஏன் ம... மேலும் பார்க்க

MI vs CSK: 'இந்த வெற்றியை நான் அவருக்கே அர்ப்பணிக்கின்றேன்' - கேப்டன் ருதுராஜ் உருக்கம்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்23) சென்னை vs மும்பை அணிகளுக்கு இடையிலனா போட்டி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில... மேலும் பார்க்க