செய்திகள் :

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

post image

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. அதோடு அந்த இன்ஜின் உடனே தீப்பிடித்துக்கொண்டது. இன்ஜினில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால் பைலட் உடனே விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 பயணிகள் காயம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அவசர வழி வழியாக பத்திரமாக மீட்டனர்.

காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீப்பிடித்த விமான காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகளுக்கு வேறு விமானத்தில் முன்பதிவு செய்து கொடுத்தல் அல்லது ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்து கொடுத்தல் போன்ற வேலைகளை ஏர்லைன்ஸ் நிர்வாகம் செய்து வருகிறது.

இது குறித்து ஸ்விஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,''டெல்லியில் விமானம் LX147 தொடர்பான ஒரு சம்பவம் குறித்து நாங்கள் அறிவோம். இதில் சம்பந்தப்பட்ட விமானம் Airbus A330 வகையைச் சேர்ந்தது. அந்த விமானத்தில் 228 பயணிகளும், நான்கு பச்சிளம் குழந்தைகளும் பயணித்தனர். சம்பந்தப்பட்ட பயணிகளை உடனே தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களுக்கு தொடர்பு அட்டைகளை கொடுத்துள்ளோம்.

இத்தகைய சூழல் இதில் தொடர்புடைய அனைவருக்கும் மன உளைச்சலை அளிக்கக்கூடியதாகும். எங்கள் உள்ளூர் குழுக்கள் சம்பவ இடத்திலேயே எங்கள் பயணிகளைக் கவனித்து வருவதுடன், அவர்களுடன் நேரடித் தொடர்பிலும் உள்ளனர்''என்று குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தை சரி செய்ய ஸ்விட்சர்லாந்தில் இருந்து தொழில் நுட்ப குழு வருகை தர இருக்கிறது.

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. ... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனா... மேலும் பார்க்க