செய்திகள் :

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

post image

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை
போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை

ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.

இந்தியா கேட்
இந்தியா கேட்

போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.... மேலும் பார்க்க

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின்... மேலும் பார்க்க

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துற... மேலும் பார்க்க

புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவ... மேலும் பார்க்க

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் க... மேலும் பார்க்க