செய்திகள் :

தங்கமா, பங்குச் சந்தையா... எதில் முதலீடு செய்தால் லாபம்? - வாங்க தெரிஞ்சிக்கலாம்!

post image

பலருக்கும் எதில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்ற கேள்வி இருக்கிறது. தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் இருக்கும் சூழலில், எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

செல்வம் சேர்க்க உதவும் இந்த அஸெட் அலோகேஷன் ஃபார்முலா என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன, செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதையெல்லாம் விரிவாக உங்களுக்குச் சொல்லித்தருவதற்காக நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனம் இணைந்து நாமக்கல்லில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன், இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் சார்பாக எல்.சுதாகர் மற்றும் எல்.எம்.அனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதோடு ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.

அஸெட் அலொகேஷன் முதலீடு

இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22-ம் தேதி நாமக்கல்லில், சேலம் மெயின் ரோட்டில் எல்.எம்.ஆர் திரையரங்கத்தின் அருகில் உள்ள சனு இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடக்க உள்ளது. காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நடக்கும்.

இதில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/integratedmfலிங்க்கை க்ளிக் செய்யவும். 044 6680 2980/ 044 6680 2907 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும் பதிவு செய்யலாம்.

பங்குச் சந்தை ஃபண்டுகளைவிட தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! - தங்கம் இனியும் லாபம் தருமா?

ஆங்கிலத்தில் 'Euphoria' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதீத உற்சாகம் என்று இதனைத் தமிழ்ப்படுத்தலாம். இந்த அதீதமான உற்சாக நிலை வந்துவிட்டால் போதும், மக்கள் தலைகால் புரியாமல் செயல்படத் தொடங்குவார்கள். அ... மேலும் பார்க்க

கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்!

நீங்கள் 50 வயதைக் கடந்தவரா? ரிட்டயர்மென்ட் பணமாகஒரு பெரிய தொகை கையில் இருக்கிறதா? அல்லது வரப்போகிறதா? வயதான காலத்தில் மருத்துவச்செலவுகள்தான்உங்களதுபெரிய பிரச்னை என்று நினைப்பீர்கள்.ஆனால், தமிழ்நாட்டுப... மேலும் பார்க்க

அன்று 2,000 கோடி கடன், பாக்கெட் காலி; ஆனால் இன்று..! - எலான் மஸ்க்கின் வாழ்க்கைப் பாடம்

2008-ம் ஆண்டு. உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரம். ஆனால் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உலகம் அதைவிட மோசமாகச் சிதைந்து கொண்டிருந்தது. பொறியில் மாட்டிய எலியாய், மஸ்க் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் ... மேலும் பார்க்க

Personal Finance: பிசினஸ் லாபத்தில் கோடிகளை உருவாக்குவது எப்படி? 5.6 கோடி ரகசியம் தெரியுமா?

தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல வெற்றியாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். "பிசினஸ் எப்படிங்க போகுது?" என்று கேட்டால், "சூப்பரா போகுதுங்க! போன வருஷத்த விட டர்ன் ஓவர் டபுள்!" என்று உற்சாகமாகச் சொல்வார்க... மேலும் பார்க்க

லாபம் தரும் முதலீட்டுக்கு உதவும் அஸெட் அலொகேஷன்! - கற்றுக்கொள்ளத் தயாரா?

தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் இவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பதுதான் அஸெட் அலொகேஷன் ஃபார்முலா. நம்முடைய ரிஸ்க்கை அறிந்து, இலக்குகளை வெற்ற... மேலும் பார்க்க

ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!

இந்தியாவில் முதுமை என்பது முன்பு வரமாக இருந்தது; கூட்டுக் குடும்பங்கள் முதியோரைத் தாங்கின. ஆனால், 2026-ல் நிலைமை தலைகீழ்.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2026-ம் ஆண்டில் ... மேலும் பார்க்க