செய்திகள் :

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

post image

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நெற்பயிருடன் விவசாயிகள்

தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.

கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது.

பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார்.

வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்

இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் வாய்க்கால் வழியாக வெளியான நிலையில், அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முருங்கைக்காய் கிலோ ரூ.320, கத்தரிக்காய் ரூ.120 - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 எக்கர் பரப்பளவில் யாழ்ப்பாணம்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் மூழ்கிய 50,000 வாழைகள்; படகில் மீட்டு விற்பனைக்கு அனுப்பிய விவசாயிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில... மேலும் பார்க்க

சங்கரன்கோவில்: மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500-க்கு விற்பனை; வரத்து குறைவால் விலை கடும் உயர்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: உதவாத `உலர்களங்கள்' - விலை போகாத பயிர்கள்... குமுறும் விவசாயிகள்!

உலர்களம்உலர்களம் என்பது ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கிறது.ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் உலர்களத்தின் பரவ... மேலும் பார்க்க

``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றபோது, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெற்கதிர்கள்மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆ... மேலும் பார்க்க