செய்திகள் :

தஞ்சாவூர்: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

post image

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(24) என்பவரும் திருவிழாவுக்கு வந்துள்ளார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில் சிறுமியிடம் திருமணம் செய்துக் கொள்வதாக, ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சிறுமியுடன் சந்தோஷ் செல்லவதை பார்த்த, அடைக்கதேவன் பகுதியை சேர்ந்த அரவிந்த்(20), அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(18) மற்றும் 17,15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் பின்தொடர்ந்து அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். மேலும், சந்தோஷை விரட்டிவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அவரிடம் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதற்கிடையில், சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரியவந்தது. அவர்கள் சேதுபாவாசத்திரம் போலீஸில் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதையறிந்த சிறுமியின் தாய் சேதுபாவாசத்திரம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட, ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க