செய்திகள் :

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

post image

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஹம்சா நந்தினி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில், குழந்தையை ஈன்றெடுக்கும் தாய்க்கும், தத்தெடுக்கும் தாய்க்கும் இடையே வேறுபாடு காட்டுவது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி தவறானது.

ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை.

இதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4), அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளுக்கு முரணானது. எனவே, சட்டப்பிரிவு 60(4) ரத்து செய்யப்படுகிறது.

Represental images
Represental images

மேலும், தாய்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பைபோல, தந்தைக்கான விடுப்பையும் சமூக பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்ட விதியை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் ... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர... மேலும் பார்க்க

`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ... மேலும் பார்க்க

``முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.கவின் மனு மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஒரு மூத்த வழக்கறிஞரை ... மேலும் பார்க்க

13 ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருக்கும் மகன்; `கருணை கொலை' கோரிய பெற்றோர் - நீதிமன்றம் அனுமதி!

2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர் தான் தங்கி இருந்த மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சோகமான விபத்துக்குப் பிறகு கடந்த ... மேலும் பார்க்க

மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்: `பொதுநல வழக்கு தாக்கல் செய்தால், விசாரணை.!' - உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழிகளான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமி ஆகியோருடன், நேற்று முன... மேலும் பார்க்க