Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி - குவியும் வாழ்த்து...
``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்
கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து அவர்கள் காரை அடித்து நொறுக்கியது, காதலனை தாக்கி, அந்தக் கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று தொடர்ந்தும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி, தப்பி ஓட முயன்ற குற்றவாளிகள் மூவரையும் தற்காப்புக்காக துப்பாக்கியால் கால், கையில் சுட்டு உயிருடன் பிடித்தது.
இந்தச் சம்பவம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று கோவை சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்துப் பேசுகையில்,
"டாஸ்மாக், போதை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது.
இந்தக் கொடுமையான சூழலில் யாரையும் நம்பாமல் பெண்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு, பெற்றோர்கள், காவல்துறை என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மைப் பாதுகாக்க மாட்டார்கள். எதாவது நடந்தால் நமது வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.
பெண்கள் சக்தியின் ரூபம். நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."

நானும் ஒரு பெண் என்பதால் உரிமையுடன் சொல்கிறேன்: தனியாக யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்லாதீர்கள்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி இரவில் விமான நிலையத்திற்கு பின்னால் இருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்? நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
"என்றைக்கும் ஒரு பெண் தனியாக இரவில் செல்கிறாரோ, அன்றைக்குத்தான் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்" என்று காந்தியடிகள் காலத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினமும் நடந்துகொண்டே இருக்கின்றன.
நாம் நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாறும் வரை, பெண்களாகிய நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்," என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.















