செய்திகள் :

தமிழ்நாடு இடைத்தேர்தல்: 5 தொகுதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட தடை; முன்னாள் MLA-களுக்கு செக்!

post image

தமிழ்நாடு அடுத்து 6 தொகுதிகளில் இடைதேர்தலை நோக்கி காத்திருக்கிறது.

அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகள் ஆகும்.

இதில் திருச்சி கிழக்கை தவிர, மீதமுள்ள தொகுதிகள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகள் ஆகும்.

இந்தத் தொகுதிகளில் விரைவில் இடைதேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்
தேர்தல்

அதாவது, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைதேர்தல் தேதியை அறிவிக்கக்கூடாது என்று அந்த உத்தரவு கூறுகிறது.

அப்படியென்றால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த முடியாது.

ஆக, தேர்தல் வழக்கு முடிந்தால் தான், இந்தத் தொகுதிகளில் இடைதேர்தல் நடத்தப்பட முடியும்.

திமுக, தவெக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

மேலும், இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இந்தத் தீர்ப்பு 'செக்'காக அமைந்துள்ளது.!

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்Fire Policeதங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்த... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வை... மேலும் பார்க்க

'டிசம்பரில் வங்கதேசத்திற்குத் திரும்புகிறேன்; எந்த அரசும் தவறுக்கு அப்பாற்பட்டது அல்ல' - ஷேக் ஹசீனா

2024-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோட்டா பிரச்னை, ஊழல் போன்ற காரணங்களால் உள்நாட்டு கலவரம் வெடித்தது வங்கதேசத்தில். இது அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியைக் கவிழ்த்தது. இதனால், வங்கதேசத்தில் இருந... மேலும் பார்க்க

வேலூர் திமுக அலுவலகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு; 2,000 நாள்களைக் கடந்த அன்னதானம்!

வேலூரில் உள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரந்தோறும் 6 நாள்களிலும் மதிய உணவு வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு, கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்த சமயம், உ... மேலும் பார்க்க

`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..!' - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க

சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.திருப்புவனம் காவல் நி... மேலும் பார்க்க