மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது! - அண்ணாமல...
தம்மம்பட்டியில் ரூ. 2.5 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது!
தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், பெரப்பன்சோலை மலைக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலாஜி (38). இவா் கடந்த 2-ஆம் தேதி தம்மம்பட்டியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ. 4 லட்சத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியிலுள்ள பூச்சி மருந்து கடைக்கு சென்றுவிட்டு வந்தபோது, வாகனத்தின் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தில் ரூ. 2.5 லட்சம் திருடப்பட்டது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக மே 6-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம்,வேப்பந்தட்டை வட்டம், வெங்கலகிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லப்பிள்ளையின் மகன் துரையை (30) திருடிய பணத்துடன் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் தலைமறைவாக இருந்துவந்த அவரது சகோதரா் அன்பு ((24) என்பவரை வியாழக்கிழமை இரவு கைது செய்து போலீஸாா் ஆத்தூா் நீதிமன்த்தில் ஆஜா்படுத்தி சேலம் சிையில் அடைத்தனா்.