செய்திகள் :

"தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை..!"- டாக்ஸிக் குறித்து சரத்குமார்

post image

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘டாக்ஸிக்’.

இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 26 ஆம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான... அதே சமயம் அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

Toxic
Toxic

இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தைப் பாராட்டி நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று 'டாக்சிக்' திரைப்படம் பார்த்தேன். இயக்குநர் கீது மோகன்தாஸ் சினிமா கற்பனைக்கும் அப்பாற்பட்டு இதை எவ்வாறு சிந்தித்து, காட்சிகளை சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறார் என்று வியந்தேன்.

கடினமான காட்சிகளில் குறிப்பாக க்ளைமாக்ஸில் மிகச் சுலபமாக நடித்திருக்கிறார் யஷ். அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.

தொழில்நுட்பச் சிறப்பும், தனிநபர்களின் சிறப்பான நடிப்பும், ஒளிப்பதிவும் நிறைந்திருப்பதால் இந்தத் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

சரத்குமார்
சரத்குமார்

படக்குழுவின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தயவுசெய்து படத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க