செய்திகள் :

தயாராகும் 11,000 வீடுகள்: மும்பை தாராவி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு 754 சதுர அடி வீடு

post image

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதானி நிறுவனம் இத்திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக ஏற்கனவே தாராவியில் இருக்கும் பெரும்பான்மையான குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், மீனவர்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் தாராவியில் உள்ள பழைய குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் பங்களா போன்ற தனி வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு மாநில அரசு கொடுக்கும் 350 சதுர அடி வீடு போதுமானது கிடையாது என்று போர்க்கொடி தூக்கினர்.

தற்போது தாராவியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு 350 சதுர அடி வீடு இலவசமாக வழங்க அதானி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. குடிசையில் மாடி இருந்தால் அதற்கும் தனியாக ஒரு வீடு கொடுக்கவும் அதானி நிறுவனம் சம்மதித்து இருக்கிறது.

கட்டிடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தனிவீடுகளில் வசிப்பவர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் வீடு அளவை அரசு அதிகரித்து இருக்கிறது. அவர்களுக்கு குறைந்த பட்சம் 500 சதுர அடியும், அதிக பட்சம் 754 சதுர அடியும் வீடு கொடுக்க மாநில அரசு அதானி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் உள்ள 8700 வீடுகள் பயனடையும். கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தாராவியில் கட்டிடங்கள் மற்றும் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 500 சதுர அடி வீடு கொடுக்கும் வகையிலான திட்டத்தை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்தே இப்போது குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பங்களா போன்ற தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் வீடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறையானது, இதற்கான திருத்த அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக, இந்த குடியிருப்பாளர்களுக்கு 400 சதுர அடி வீடு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

754 சதுர அடிக்கும் மேல் வீடு பெற விரும்புபவர்கள் கட்டுமான செலவை கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாராவி ஷாஹு நகர் கட்டிடத்தில் வசிக்கும் ராஜேஷ் சர்மா இது குறித்து கூறுகையில்,''ஷாஹு நகரில் 45 கட்டிடங்கள் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வீடும் 275 முதல் 375 சதுர அடி வரை உள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் எங்களுக்கு 750 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதனை தாராவியிலேயே அரசாங்கம் எங்களுக்கு வழங்கினால், எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை," என்று அவர் கூறினார்.

11 ஆயிரம் வீடுகள்

தாராவி குடிசைவாசிகளுக்கு முதல் கட்டமாக 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட இருக்கிறது. தாராவி அருகில் இருக்கும் மாட்டுங்காவில் ரயில்வேயிடம் வாங்கப்பட்ட நிலத்தில் இந்த 11 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் 35 ஏக்கரில் இந்த வீடுகள் கட்டப்பட இருக்கிறது. இதற்காக குடிசை புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் நிர்வாகம் மாட்டுங்கா ரயில்வே நிலத்தை சுத்தப்படுத்தி வருகிறது. அதோடு அந்த இடத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று வீடு அல்லது வாடகை கொடுத்து அவர்களை வீடுகளை காலி செய்யும்படி கூறி வருகின்றனர். மழை காலத்திற்கு முன்பு வீட்டை காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆ... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: "யாரும் குற்றவாளிகள் இல்லை" - கடைசியாக இருந்த 4 பேரும் விடுதலை

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நான்கு குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்க... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க

தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்ற தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனா... மேலும் பார்க்க