செய்திகள் :

`தலைமைச் செயலகமா... தவெக கட்சி அலுவலகமா?' - திமுக எம்.பி., வில்சன் கண்டனம்!

post image

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகத்தின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தவெக-வுக்கு ஆதரவாகவும், எடப்பாடியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 22 பேர் எதிராகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திமுக எம்.பி.வில்சன்
திமுக எம்.பி.வில்சன்

இந்த விவகாரம் அரசியல் அரங்கில் விவாதத்தை தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் தன் எக்ஸ் பக்கத்தில், ``கட்சித் தாவல் குற்றச்சாட்டிற்குள்ளான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக 21 நாட்களுக்குள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தலைமைச் செயலக வளாகத்திலேயே தங்களை த.வெ.க கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அரசுத் தலைமைச் செயலக வளாகமும் அதன் அறைகளும் ஒரு அரசியல் கட்சியில் இணைவதற்கான இடங்களாக மாறியிருப்பதும், அனைத்துவிதமான அறநெறிகளும் ஒழுக்க நடைமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக இந்த மூன்று தொகுதிகளின் மக்கள் மீது தற்போது தேர்தல்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. பொதுவாக ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய மற்றொரு இடைத்தேர்தலுக்காக, கணிசமான அளவு பொதுமக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க