ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பி...
'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
சில நாள்களாக, 'எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்... தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து குரல் எழுப்பி வந்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
இது திமுக, காங்கிரஸ் இடையே அனலை கிளப்பியது. இந்த கூட்டணி அனல் டெல்லி கதவுகளைத் தட்ட, சமீபத்தில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், 'ஆட்சியில் பங்கு காங்கிரஸ் கட்சியின் குரல் அல்ல' என்று புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வைகோ பேச்சு
இந்த நிலையில், நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், "காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார்.
அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல இருக்கிறது. அவரது பேச்சை அந்தக் கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம்.
உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
இதற்கு பதிலடி தருவது போல மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில்...
"கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.
பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே" என்று பதிவிட்டுள்ளார்.
கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன்.
— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 20, 2026
பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே. @TamilTheHinduhttps://t.co/Pq5PjGeNYV













