செய்திகள் :

`தளபதி படம் பார்ப்பீங்களா?’ - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி!

post image

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் பத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் அந்தப் பள்ளிக்குச் சென்ற த.வெ.க-வின் காணை ஒன்றியச் செயலாளர் ஜான்பீட்டர், தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.

அங்கிருந்த தலைமை ஆசிரியரிடம், `பள்ளிக்கூடம் எப்படி நடக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். அதில் குழம்பிப் போன தலைமை ஆசிரியர், `நன்றாக நடக்கிறது’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, `இங்கு எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்… எப்படி படிக்கிறார்கள்… ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா…’ என்று கல்வித்துறை அதிகாரிகளைப் போல கேள்வி எழுப்பினர் த.வெ.க நிர்வாகிகள்.

தலைமை ஆசிரியர் அறையில் தவெக நிர்வாகிகள்

அதற்கு அமைதியாக பதிலளித்த தலைமை ஆசிரியரிடம், `நடப்பது எங்கள் தளபதி ஆட்சி. பார்த்து நடந்துக்கங்க’ என்று கூறிவிட்டு, வகுப்பறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஒரு வகுப்பறைக்குள் சென்ற அவர்கள், `நாங்கள் யார் தெரியுமா? உங்களுக்கு தளபதி விஜய்யை தெரியுமா? அவரின் படங்களைப் பார்ப்பீர்களா? இப்போது அவர்தான் முதலமைச்சர்.

நாங்கள் டி.வி.கே கட்சியில் இருந்து வர்றோம்’ என்று சொன்னதும் மாணவர்கள் ஆரவாரமாக விசிலடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர்கள், `நடப்பது நம் தலைவர் தளபதியின் ஆட்சி.

அதனால்தான் ஆய்வு செய்ய வந்தோம்’ என்று கூறி மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கிப் பார்த்தனர். அதன் பிறகு அங்கிருந்து சென்ற அவர்கள், இந்த அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ் வீடியோவாக தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த விவகாரம் பெற்றோர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

மயிலாடுதுறை: `ஓப்பன் பார்'ஆக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறதுகூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள்,... மேலும் பார்க்க

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த... மேலும் பார்க்க

அறிவிக்கப்படாத மின்வெட்டு: 'மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்' - எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தினம் ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``KG படிக்கும் குழந்தை பேசுவதைப் போல..." - திமுக-வை சாடும் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்!

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தவெக அரசால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் மேலிடப் பொருப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் இல்லத்துக்கு சென்றிருந்தார். அங... மேலும் பார்க்க

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! - டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டா... மேலும் பார்க்க

`Reels எடுத்து Post செய்ய தான் சிங்கப்பெண் பிரிவா? தவெக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுங்கள்'- உதயநிதி

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்... மேலும் பார்க்க