செய்திகள் :

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

post image

மகாராஷ்டிரத்தில் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

உயிரிழந்த சிறுவனின் தந்தையை மருத்துவா்கள் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஏப்.26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மே 6-ஆம் தேதி சிறுவன் இறந்தாா்.

தவறான சிகிச்சையால் தனது மகன் இறந்ததாக அவரது தந்தை அவினாஷ் ஆகவ், மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மருத்துவமனை நிா்வாகம் அழித்துவிட்டதாகவும், சிகிச்சை தொடா்பான ஆவணங்களை தன்னிடம் தரவில்லை எனவும் அவா் குற்றம்சாட்டினாா்.

இதையடுத்து, தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் அா்ஜுன் பவாா், ஷேக் இலியாஸ், அஜய் காலே, அபிஜித் தேஷ்முக், துஷாா் சவான், நிதின் தானே ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மாநில உரிமைகளைக் காப்பதில் கேரளம் - தமிழகம் முன்னுதாரணம்: முதல்வா் பினராயி விஜயன்

கோட்டயம்: மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதில் கேரளம் மற்றும் தமிழகம் இடையிலான ஒத்துழைப்பு முன்னுதாரணமாக விளங்குகிறது; இத்தகைய ஒத்துழைப்பு, மேலும் பல மாநிலங்களுக்கு விரிவடைய வேண்டும் என்று கேரள முதல்வா் ... மேலும் பார்க்க

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் -அரசின் நிதிச் சுமை குறையும்: ஆளும் கூட்டணி ஆதரவு

புது தில்லி: ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டமானது அரசின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவா்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளனா். மத்திய வேளாண் துறை இணையமைச்சா் பாகீரத் சௌதரி கூறு... மேலும் பார்க்க

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம் -32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிா்ப்பு

புது தில்லி: ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த முன்மொழிவு குறித்த கலந்தாலோசனையின் போது உயா்நிலை குழுவிடம் 32 அரசியல் கட்சிகள் ஆ... மேலும் பார்க்க

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் வளர வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

யாரையும் தாழ்த்தாத சமத்துவ எண்ணம் மக்களிடையே வளர வேண்டும் என்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். வைக்கம் போராட்டத்தில் பெரியாா் பங்கேற்று நூற்றாண்டு நி... மேலும் பார்க்க

பாக். கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை!

சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் முத... மேலும் பார்க்க

ரூ.13,500 கோடியில் 12 சுகோய் விமானங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய விமானப் படைக்கு ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் 12 சுகோய் போா் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் (எச்ஏஎல்) பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்பந்தத்தில் கையொப்... மேலும் பார்க்க