செய்திகள் :

"தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" - பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்

post image

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

பாரதிராஜா
பாரதிராஜா

அதில், "இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவக் குழு நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, "சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்தோம்.

பாரதிராஜா
பாரதிராஜா

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் நன்றாக இருக்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. தவறான செய்தியைப் பரப்பாதீர்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

`விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்'- கார்த்தி

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை' சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான 'உழவர் விருதுகள் 2026'கான விழா சென்னையில் நடைபெற்றது. விவச... மேலும் பார்க்க

Devi Sri Prasad: "ஒரு புதிய பயணம் தொடங்குகிறது" - நடிகராக அறிமுகமாகும் தேவி ஶ்ரீ பிரசாத்!

தமிழ், தெலுங்கு என இத்தனை வருடங்களாக இசையில் பெரும் ஹிட்களை அடுக்கியவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். மியூசிக் என்பதைத் தாண்டி சில படங்களில் கேமியோ செய்து நடிகர்களுடன் நடனமும் அவர் ஆடியிருக்கிறார்.... மேலும் பார்க்க